செயல்முறை மருத்துவம் என்றால் என்ன? செயல்முறை மருத்துவம் ஒரு இணை மருத்துவத் துறை ஆகும். இத்துறையில் 'செயல்' என்பது நாம் அன்றாடம் செய்யும் அனைத்து செயல்களையும் (உதா: குளித்தல், உடை உடுத்துதல், அலுவல்/படிப்பு சார்ந்த செயல்கள், விளையாட்டு, பொழுதுபோக்குச் செயல்கள்) குறிக்கும். ஒரு நோயோ, குறைபாடோ, (அ) காயமோ ஒருவரின் அன்றாட செயல்களில் ஈடுபடும் திறனை பாதிக்கும்பொழுது, அந்நபரை அந்த பாதிப்பில் இருந்து (திறன்களை மேம்படுத்துவதன் மூலமாகவோ, மாற்று வழிமுறைகளை போதிப்பதன் மூலமாகவோ, மற்றும்/அல்லது சுற்றுப்புறத்தை மாற்றியமைப்பதன் மூலமாகவோ) விடுவிப்பதே செயல் முறை மருத்துவமாகும். செயல்முறை மருத்துவர்கள் பயன்படுத்தும் சில சிகிச்சை முறைகள்: சுய பராமரிப்பு சிகிச்சை (self-care training), அறிவுத்திறன்சார் பயிற்சி, உடற்பயிற்சி, குழு சிகிச்சை, கைத்திறன் சிகிச்சை (hand therapy), சுற்றுப்புறத்தை மாற்றியமைத்தல் (environmental modification), விளையாட்டு சிகிச்சை (play therapy), புலனுணர்வு-அசைவுத்திறன் சார் பயிற்சிகள் (sensorimotor activities), அணைவரிக்கட்டை (splinting) சிகிச்சை, மற்றும் தொழிற்பயிற்சி (v
Comments
Post a Comment